போராடி வென்ற உலகக் கிண்ணத்தினை தொடாமல் இருக்கக் காரணம் நிற வேறுபாடா… – ரசிகர் கவனத்தினை திருப்பிய N’Golo Kante…

பிரான்ஸ் அணி வீரரான என் கோலோ காண்டே (N’Golo Kante) உலகக் கோப்பையை தொடாமால், வீரர்களுக்கு பின்னால் இருந்ததைக் கண்ட சக வீரர் அவரை பிடித்து அழைத்து வந்து உலகக் கோப்பையை அவரிடம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 15ம் திகதி உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் குரேஷியா அணியை பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

லீக் சுற்றில் பல அணிகளிடம் போராடி வெற்றி பெற்று இறுதியில் சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் பிரான்ஸ் வீரர்கள் அனைவரும் கொட்டும் மழையில் உலகக் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு விதவிதமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் உலகக் கோப்பையை வாங்கிய பின்பு அந்தணி வீரரான N’Golo Kante(27) உலகக்கோப்பையை தொடாமல் சக வீரர்களுக்கு பின்னால் நின்றுள்ளார்.

உடனடியாக இதைக் கண்ட பிரான்ஸ் அணியின் மிட் பில்டர் N’Zonzi உடனடியாக உலகக் கோப்பை கையில் வைத்திருந்த மற்றொரு பிரான்ஸ் வீரரான Florian Thauvin இடமிருந்து வாங்கி, N’Golo Kante-விடம் கொடுத்தமை அனைவரையும் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

பிரான்ஸ் அணிக்காக விளையாடி வரும் வீரர்களிள் இவரும் ஒரு முக்கியமான வீரர். அணியின் பெயர் சீட்டில் இவரின் பெயர் கண்டிப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒரு மனிதனுக்கு கூச்ச சுபாவம் இருக்கலாம், மிகவும் அமைதியாக இருக்கலாம், ஆனால் உலகக்கோப்பை வென்ற தருணத்தில் கூட அதை பிடித்து கொண்டாடாமல் வீரர்களுக்கு பின்னால் நின்றிருந்த N’Golo Kante-ன் பண்பைக் கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Image result for N'Golo Kante was too shy to ask to hold the World Cup trophy

Image result for N’Golo Kante