போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடுக்க பொலிஸ் மோப்ப நாய்கள் களத்தில்..

எதிர்வரும் காலங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்த பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்த பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினருடன் இணைந்து செயற்படுவது குறித்து பொலிஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது.

இதற்கென ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸின் இரண்டு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸார் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதனை தடுக்கவும், நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் பொலிஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma