(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் இலங்கை தொடர்பில் சிறந்த எண்ணக்கருவை சர்வதேச மட்டத்தில் முன்னெடுப்பதற்கு இந்த மாநாட்டின் மூலம் முடிந்திருப்பதாக சுற்றுலா மேம்பாட்டு அலுவலகத்தின் தலைவர் கிசு கோமஸ் சுட்டிக்காட்டினார்
குறித்த போரா சர்வதேச மாநாட்டின் மூலம் 51 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் பயன் கிடைக்கும் என சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் துறைக்கு பாரிய உந்துசக்திக்கான பங்களிப்பை இந்த மாநாடு வழங்கியிருப்பதாக பணியகத்தின் தலைவர் கிசு கோமஸ் குறிப்பிட்டுள்ளார்.
போரா சமூகத்தின் தலைவர் கலாநிதி ஸெய்யிதினா முபாதல் (முப்படேல்) ஸைபுத்தீன் தலைமையில் இம்மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
போரா சமூகத்தினர் நடத்தும் ‘போரா’ சமூக ஆசூரா தின சர்வதேச மாநாடு, நேற்று முன்தினம் (01) ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
இம்மாநாடு வரும் 10 ஆம் திகதி வரை, கொழும்பு – கொள்ளுப்பிட்டியிலுள்ள போரா சமூக பள்ளிவாசலை மையப்படுத்தி நடைபெற்று வருகின்றது.