போர்ட் சிட்டி திட்டத்தால் மீனவர் வாழ்வாதாரத்தில் பாதிப்பு

போர்ட் சிட்டி திட்டத்தினால் கொழும்பு மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுக நகர்த் திட்ட நிர்மாணப் பணிகளுக்காக 300 மில்லியன் மணல் கியுப்கள் நிரப்பப்பட்டுள்ளதனால் மீனவர்கள் தமது வாழ்வாதார தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமது பிரச்சினைகள் குறித்து மீனவர்கள் அண்மையில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளனர்.

துறைமுக நகர்த் திட்டத்தினால் மீனவர்கள் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு நட்ட ஈடு வழங்கப்படும் என அமைச்சர் மேலும்  உறுதியளித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மீனவர்கள் பற்றிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.