அவுஸ்திரேலிய நிறுவனத்தின் பங்குகளின் ஒரு பகுதியை போலி உரிமை பத்திரம் ஊடாக விற்பனை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(11) தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதி பத்மினி எம்.ரணவக்க உத்தரவிட்டுள்ளார்.