போலி கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த மூவர் கைது…

(FASTNEWS-COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில், போலி கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த சந்தேகநபர்கள் மூவர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர்களிடமிருந்த வெவ்வேறு வங்கிகளின் 13 வீசா அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் சிலாபத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர்.

சந்தேகநபர்கள் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.