சீனாவில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவரை, அங்குள்ள மருத்துவர் ஒருவர் கொடுரமாக தாக்கியுள்ளார். இந்த அதிர்ச்சி காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள மொங்கோலியா புறகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த பெண் ஒருவர், மருத்துவக் கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லையெனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மருத்துவமனை பெண் மருத்துவர், அறுவை சிகிச்சை அறையிலேயே அந்தப் பெண்மணியை கொடுரமாக தாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு மருத்துவர் கண்டும் காணாதது போல இருந்துள்ளார்.
அறுவை சிகிச்சை அறையிலேயே நோயாளிடம் அதிக பணம் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்
[youtube url=”https://www.youtube.com/watch?v=RDd1wIkljIo” width=”560″ height=”315″]