(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இளம் வயது ஆண் குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அதனை வீடியோ செய்து அதன் மூலம் பணம் ஈட்டி வெளிநாடுகளுக்கு விற்கும் வியாபாரம் ஒன்றினை முன்னெடுக்கும் சந்தேக நபர் ஒருவரை கொள்ளுபிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர் சிறுவர்களுக்கான ‘ரியாலிட்டி’ நிகழ்ச்சி வடிவமைப்பாளர் என்பதோடு ஆங்கில ஆசிரியர் எனவும் குறிப்பிடப்படும் குறித்த நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நுகேகொட நீதிவான் நீதிமன்றம் நேற்று(26) உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் பன்னிபிட்டிய, தெபாநம, சமன் உயன பிரதேசத்தில் வசிக்கும், எதிரிசிங்க எனப்படும் 54 வயதுடைய நபராவர். குறித்த நபர் மிகவும் சூட்சமான முறையில் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அவர்களுக்கு பரிசில்களை வழங்கி வசீயப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் வீட்டில் பாலியல் தொடர்பிலான இறுவெட்டுக்கள் 135 அதற்கான பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்ட், கெமரா மற்றும் தொலைபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் ஆங்கில ஆசிரியராகவும் கடமையாற்றி வருகிறார். இவரது வீட்டிற்கு அழைத்து கற்பிக்கும் இவர், இவரது வகுப்பில் உள்ள 10-12 ஆகிய வயதுகளுக்கு இடையிலான பிள்ளைகளையே இவரது மாய வலைக்குள் சிக்க வைப்பதாகவும் பரிசோதனைகளில் இருந்து தெரிய வருகின்றது.
3 பிள்ளைகள் குறித்த சந்தேக நபரினால் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கப்படுகின்றது.