மகரகம நகர சபைக்கு பொதுஜன பெரமுன போட்டியிடுவது குறித்து இன்று தீர்மானம்…

மகரகம நகர சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் இன்று(19) வௌியிடவுள்ளது.

மகரகம நகர சபைத் தேர்தலுக்கான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பே இன்று(19) அறிவிக்கப்பட உள்ளது.

அதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 மனுக்களும் இன்று(19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#reeshma..