நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் பிணைக் கோரிக்கை மூன்றாவது முறையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மோசன் மனு ஊடாக அவர் கோரிய பிணையை கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(03) நிராகித்துள்ளார்.
தனது மகளுக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக கோரியே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எனினும் அவரின் மகள் என்ன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவ அறிக்கை முன்வைக்காமை காரணமாக குறித்த இந்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் வேறு காரணங்களுக்காக விமல் வீரவங்சவிற்கு பிணை வழங்குவதை பரிசீலிக்க இன்னும் சிறிது நேரத்தில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.