மகளைபோல் வேடமிட்டு தப்பிக்க முயன்ற கைதி தற்கொலை

(FASTGOSSIP|COLOMBO) – கடந்த சனிக்கிழமை தனது மகளைப்போல் வேடமிட்டு சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி ஒருவர் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ மாகாணத்தில் உள்ள அங்கிற டோஸ் ரெய்ஸ் நகரை சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவர் கிளாவினா டா சில்வா. இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் 73 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

குறித்த நபர் தனது 19 வயது மகளைப்போல் வேடமிட்டு சிறையில் இருந்து தப்ப முயன்ற வேளையில், கடைசி நேரத்தில் அவர் சிறைக்காவலர்களிடம் சிக்கினார்.

இந்நிலையில், அவர் மீண்டும் தப்பிக்க முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு வாய்ந்த தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் தப்பிக்க முயன்றபோது மாட்டிக்கொண்டதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.