மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களில் சிலவற்றை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில், மல்வது, அஸ்கிரிய, ராமஞ்ஞா மற்றும் அமரபுர ஆகிய மகாநாயக்க பிரிவுகளின் தலைமைத் தேரர்கள் தவிர, ஏனைய தலைமைத் தேரர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் செல்லுபடியற்றதாக ஆக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில், குடிவரவு குடியகல்வுப் பிரிவு நிர்வாகி எம்.என். ரணசிங்கவிடம் வினவியபோது, இவ்வாறு இராஜதந்திர கடவுச் சீட்டு இரத்து செய்யப்படும் தலைமை தேரர்களின் பெயர்ப்பட்டியல் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.