கெப்பிடல் மகாராஜா நிறுவனத்திற்கு (Capital Maharaja Organization Limited) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு புதிதாக வழங்கியுள்ள UHF அலைவரிசைகள் ஒன்பதையும் ஒரே தவணையில் வழங்காது, மூன்று மூன்றாக பிரித்துவழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஜனாதிபதியின் தலையீட்டின் அடிப்படையிலேயே மகாராஜா நிறுவனத்திற்கு குறித்த ஒன்பது UHF அலைவரிசைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்குச் சொந்தமான இணையத்தளத்தில் (www.trc.gov.lk) கடந்த மே மாதம் 01ஆம் திகதி தொலைக்காட்சி நிறுவனங்களும் அவற்றுக்குச் சொந்தமான அலைவரிசைகளும் குறிப்பிடப்பட்டிருந்த ஆவணத்திற்கமைய தற்போது மகாராஜா நிறுவனத்திற்கு மூன்று புதிய அலைவரிசைகள் வழங்கப்பட்டுள்ளன.
மதுகம – UHF CH 51 உம் UHF CH 58, ஹந்தான – UHF CH 34, கிளிநொச்சி – UHF CH 51 உம் UHF CH 34 என்ற விதத்திலேயே மகாராஜா நிறுவனத்திற்கு புதிய அலைவரிசைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத்தவிர மகாராஜா நிறுவனத்திற்கு D2H என்ற (Direct-to-Home) அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரியவருகிறது.