மகா சங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

(FASTNEWS|COLOMBO) – எந்தப் பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் மகா சங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதனை கடுமையாக நிராகரிப்பதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று(16) பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரம் நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் மகா சங்கத்தினரை விமர்சனம் செய்திருந்த விடயம் குறித்து தாம் ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொண்டதாகவும் அவ்வாறு மகா சங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதனைக் கடுமையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.