மகிந்தவை தலைவராக அறிவிக்குமாறு கோரிய மனுவிற்கு பதில் வழங்கிய நீதிமன்றம்

மகிந்தவை தலைவராக அறிவிக்குமாறு கோரிய மனுவிற்கு பதில் வழங்கிய நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என உத்தரவிடுமாறு கோரி அந்த கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுமாறு கோரி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தாக்கல் செய்துள்ள எதிர்ப்பு மனு சம்பந்தமான மறுஎதிர்ப்பு மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் மனுதார்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் மறுஎதிர்ப்பு மனுவை எதிர்வரும் மார்ச் 13 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிரதிவாதியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா சார்பில் ஆஜரான சட்டத்தரணி வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்ற வாதத்தை முன்வைத்து எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார்.

பொரலஸ்கமுவ வெரஹெர ,12 காங்காராம வீதி என்ற விலாசத்தை சேர்ந்த அருண பியசாந்த மற்றும் மத்தேகொடயை சேர்ந்த தொன் நந்தன ஸ்ரீநாத் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு டிசம்பரம் மாதம் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அனுர பிரியதர்ஷன யாப்பா பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

தலைமைப் பொறுப்பு மைத்திரிக்கா? மகிந்தவுக்கா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவுக்கு வழங்க கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை மார்ச் மாதம் 13 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்புமாவட்ட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு முன்னாள் உறுப்பினர்களான அருணபிரியசாந்த மற்றும் அசங்க ஸ்ரீநாத் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

2015ம் ஆண்டு தேர்தலின் போது,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றுமொருகட்சியின் கீழேயே பொது வேட்பாளராக போட்டியிட்டார்.

எனவே அவருக்கு ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பு வழங்க இயலாதுஎன குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.