பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றின் மீதான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மகிந்தானந்த அழுத்கமகே அமைச்சராக செயற்பட்ட காலத்தில் 20 மில்லியன் ரூபாய் செலவில் பொரளையில் வீடு ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். குறித்த வீட்டினை வாங்குதற்கான நிதி சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டது எனவும், அந்த நிதியிலேயே வீடு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கே தற்பொழுது நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.