முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதை எதிர்த்து அனுராதபுரம் பஸ் நிலையத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
நல்லாட்சி நடைபெற்று வரும் சூழலில் முன்னாள் ஜனாதிபதி விகாரை மற்றும் கோயில்களுக்கு சென்று மக்களை ஏமாற்றி, மக்களின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நாம் பிரஜைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
(கே.அஸீம் முஹம்மத்)