மக்களின் நலன்கருதி விசேட புகையிரத சேவைகள்…

(FASTNEWS|COLOMBO) புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்களின் நலன்கருதி இன்றும்(20) நாளையும்(21) விசேட புகையிரத சேவைகள் இடம்பெறும் என புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று மருதானை – மாத்தறை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான இரண்டு விசேட மேலதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், மருதானையிலிருந்து மாத்தறை, பெலியத்த வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, காங்கேசந்துறை ஆகிய இடங்களுக்கும் விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதேவேளை, காங்கேசந்துறை, பெலியத்த ஆகிய இடங்களிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான மேலதிக இரண்டு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.