(FASTNEWS|GUATEMALA)கவுதமாலா நாட்டில் நகராட்சி அலுவலகம் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் லொரி புகுந்து விபத்திற்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், அதிவேகமாக வந்த லொரி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து மக்கள் கூட்டத்தில் புகுந்தது. விபத்து நடந்தது.
காயமடைந்தவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்திற்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கவுதமாலா அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது