மக்கள் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அடைவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது – ரிஷாத்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டமானது நேற்று(29) புத்தள நகரில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் உரையின் ஒரு பகுதி..

“இன்றைய காலகட்டமானது மக்கள் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அடைந்து கொள்ளும் ஒரு சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை தவறவிடுவோமெனில் இனியும் நாம் எமது பாராளுமன்ற பிரதி நிதியினை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும்.

இன்னும் சுயேட்சை அணியில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்ல முடியாது என்பதற்கு கடந்த பல தேர்தல்கள் சான்றாக உள்ளன. சுயேட்சை அணியில் போட்டியிடும் சமூகம் சார்ந்த சிந்தனை கொண்டவர்கள் அதிலிருந்து விலகி வெற்றிபெறும் அணியுடன் இணைந்து கொள்ளுமாறு நான் அழைப்புவிடுக்கின்றேன்.

நாம் இடம் பெயர்ந்து வந்த போது,எமக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்த மக்கள் புத்தளம் மக்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்து செயற்பட முடியாது. ”

என கருத்துத் தெரிவித்தார்.

மேலும், புத்தளம் மாவட்டத்தில் ஒட்டகச் சின்னத்தில் சிலாபத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் வேட்பாளரான நியாஸ்தீன் ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டமை இங்கு சிறப்பம்சமாகும்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=fbSjS8l3A3g&feature=youtu.be” width=”560″ height=”315″]

(riz)