மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றினை தனியார் மயப்படுத்த அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அனைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது குறித்த சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இது குறித்து கூறுகையில்;
குறித்த அரச நிறுவனங்களின் பங்குகளில் 10% தனியார்மயமாக்க உள்ளதாகவும், தொடர்ச்சியாக இலாபமீட்டும் நிறுவனங்களை அளிக்கவே இவ்வாறு அரசு திட்டம் தீட்டுவதாகவும் குறித்த நடவடிக்கைகளுக்கு தாம் எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
(rizmira)