(FASTNEWS | COLOMBO) – மட்டக்களப்பு, புதுநகர், திமிலைதீவு பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் கைத்துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைதான சந்தேக நபர்களான, வாசுபாலா நிமலராஜ் எனும் நிம்மி (23), ராமையா லெச்சுமணன் (55), சிவசங்கர் துஷாந்தன் (19) மற்றும் சிவானந்தராஜா புருசோதமன் (19) எனும் சந்தேக நபர்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.