மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இன்று காலை நிலவரப்படி ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பில் உள்ள கடைகள் பாடசாலைகள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து திணைக்களங்களும் மூடப்பட்டு காட்சியளிப்பதுடன்,
சந்தை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் வழமையான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளதுடன் வாகனப் போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை.