மட்டக்களப்பு வரையான புகையிரதம் பொலன்னறுவை வரை மட்டு…

மட்டக்களப்பு வரை பயணிக்கும் புகையிரதம் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புனானி பிரதேசத்தில் புகையிரத வீதி நீரில் மூழ்கியுள்ளமையினால் இவ்வாறு புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.