மட்டக்குளி’யில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி..

கொழும்பு, மட்டக்குளி ஜூபிலி மாவத்தையில் இன்று(05) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த போது, உந்துளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளவர் 24 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் அவரது மனைவியும், ஒரு பிள்ளையும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)