மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பாடசாலைகளில் தொழில்நுட்ப ஆய்வு கூடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வௌ்ளிக்கிழமை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன், தலைமையில் நடைபெற்றது.
காலை வாழைச்சேனை அந்நூர் தேசியப்பாடசாலையிலும், முற்பகல் ஏறாவூர் அலிகார் தேசியப்பாடசாலையிலும், பகல் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியிலும், மாலை காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு கல்வியமைச்சினால் இந்த தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந் நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.