மட்டு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு (VIDEO)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை முற்றாக தவிர்த்துள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டதுடன் அன்றாட வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான பூநொச்சிமுனை, புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், பாலமுனை மற்றும் நாவலடி உட்பட பல இடங்களிலும் கடல்  கொந்தளிப்பாக  காணப்படுகின்றது.

பாரிய அலைகள் கரையை நோக்கி வருதால் பேரிரைச்சலாக கடல் காணப்படுகின்றது. மீனவா்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கரையிலிருந்து நீணட துாரத்தில் இழுத்து கட்டியுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

மீன்பிடிக் கலன்கள் கரையோரங்களில் பெருமளவில் காணப்படுவதுடன் கடற்கரைப் பிரதேசங்கள் ஆள் அரவமற்று காணப்படுகின்றது.

அத்துடன் மீன்வாடிகள் மீன்விற்பனை கடைகள் என்பனவும் மூடப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் சுமர் 28 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=HOdFigjVxK4″ width=”560″ height=”315″]