கிண்ணியா கங்கைப் பாலம், கீரைத் தீவு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதால் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
மணல் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவர் மீது இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதனால், குறித்த இளைஞர்கள் மூவரும் கடலில் பாய்ந்து மூழ்கியுள்ளனர். இதில் ஒருவர் தப்பித்துள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
கடற்படையின் அதிகாரி ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொது மக்களுடன் கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.