மட்டக்களப்பு, சித்தாண்டி சந்தனமடு ஆற்றில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்தே குறித்த மூன்று பேரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக ஏறாவுர் காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.அலோசியஸ் தெரிவித்தார்.
இதன் போது மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட மேலும் சில உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.