மண்சரிவினால் போக்குவரத்து பாதிப்பு…

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண் மேட்டை அகற்ற ஹட்டன் பொலிஸாரும் ஹட்டன் நகர சபையினரும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வாகன சாரதிகள் தற்காலிகமாக கொழும்பு பழைய வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.