மண்சரிவு அபாயம் – 16 குடும்பங்கள் இடம்பெயர்வு…

தலாதுஓயா – பஹத ஹேவாஹெட – உலுவாகந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 13 குடும்பங்களை சேர்ந்த 65 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் தற்போது ஹேவாவிஸ்ஸ பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில இடங்களில் மண் மேடுகள் சரிந்துள்ளதோடு, இதனால் சொத்துகளோ மனித உயிர்களோ பாதிக்கப்படவில்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.