தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை ..

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மலையகப் பகுதிகள் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி களுத்துறை இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குக்ளேகங்கை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் அவசர நிலமைகள் பற்றி தொலைபேசி மூலம் தகவல் அறிந்து கொள்ள 117 என்ற இலக்கம் 24 மணித்தியாலமும் இயங்குகிறது என திரு.கொடிப்பிலி குறிப்பிட்டார்.

சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.