06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட மற்றும் காலி மாவட்டத்தில் நெலுவ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுவரெலியா, இரத்தினப்புரி, களுத்துறை, கேகாலை, மாத்தளை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிவேக வீதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மழையுடனான வானிலை குறைவடைந்ததை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.