மண்சரிவு ஏற்படும் மாவட்டங்களில், புதிய யோசனைத் திட்டம்

தேசிய கட்டட ஆய்வு நிலையம் அடிக்கடி மண்சரிவு ஏற்படும் மாவட்டங்களில், புதிய இணைப்புப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிலையம் திட்டமிட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படும் பகுதிகள் தொடர்பில் மக்களுக்கு தொடர்ச்சியாக தெளிவுபடுத்தல்களை வழங்க முடியுமென நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார தெரிவித்தார். பதுளை ,நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் அடிக்கடி மண்சரிவு அபாயம் ஏற்படுவதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பிலான யோசனைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆர்.எம்.எஸ் பண்டார ஆய்வு நிலையம் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள பிரிவு, தொடர்ச்சியாக நிலைமையை கண்காணித்து, மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமென கூறினார்.