இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் அந்த அணி மதிய போசன இடைவேளை வரைக்கும் 03 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியில் இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசி வரும் விஷ்வ பெர்னாண்டோ, இதுவரை 06 ஓவர்களை வீசி 02 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

