மதுபானம் மற்றும் சிகரெட்டிற்கு வரி விலக்களிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள வட் (Vat) வரித் தொகை மதுபானம் மற்றும் சிகெரட் போன்றவற்றுக்கு கிடையாது என கலால் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 2 ஆம் திகதி முதல் 11 -15 வீதமாக அதிகரிக்கப்பட்ட இந்த வரித் தொகை மதுபானத்திற்கும் சிகரெட்டிற்கும்  விலக்களிக்கப்பட்டுள்ளது.

இன்னும்,  வட் வரி அதிகரிக்கப்பட, குடி நீர் உட்பட அத்தியவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள போதிலும் மதுபானத்துக்கு வரி அறவிடுமாறு இதுவரையில் நிதி அமைச்சினால் எவ்வித அறிவுறுத்தல்களும்  வழங்கப்பட வில்லையெனவும் குறித்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.