மதுபோதையில் வாகனம் செலுத்திய 209 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(17) மாலை 06 மணிமுதல் இன்று(18) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 209 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5ம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட சுற்றிவளைப்பு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், அதற்கமைய இதுவரை 3,702 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.