(FASTNEWS|COLOMBO) – நேற்று(21) காலை 06 மணிமுதல் இன்று(22) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 237 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 4624 சாரதிகள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.