(FASTNEWS | COLOMBO) – மினுவாங்கொட பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைதியின்மைத் தொடர்பில், முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பிவிதுரு ஹெல உறுமயக் கட்சியின் உப தலைவர் மதுமாதவ அரவிந்த உள்ளிட்ட குழுவினர் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் வாகனம் பொலிஸ் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிரில்லவல – வேபட பிரதேச வீடொன்றிலிருந்து குறித்த வாகனம் பொலிஸாரல் மீட்கப்பட்டதாகவும்,
இதேவேளை வாகனத்தின் உரிமையாளர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.