(FASTNEWS|COLOMBO) – கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 274 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 2037 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.