மது போதையில் வாகனம் செலுத்திய 180 பேர் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(31) காலை 6.00 மணி முதல் இன்று(01) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி கடந்த ஜூலை 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 6,659 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.