பிரபல பாதாளக் குழு உலகத் தலைவராக இனங்காணப்பட்டுள்ள மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினரின் கைதினைத் தொடர்ந்து இந்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் கடும் குழப்பநிலைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த நபர்களை உடனடியாக இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் என்ற பிரதிவாதங்கள் எழுந்த வண்ணமுள்ளன.
தென்மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான டெனி ஹித்தெடியவின் கொலை தொடர்பில் ‘மாகந்துரே மதூஷ்’ மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், மாகந்துரே தனது குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவில் தனது பெயரினையும் தக்க வைத்துக் கொள்ளவும் குறித்த குற்றச்சாட்டு பலமாக அமைந்தது.
அது தவிர, இந்நாட்டில் இடம்பெற்ற கொலைகள் சிலவற்றுடனும் அவருக்கு தொடர்பு உள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டுக்கு ஹெரோயீன் தொகையாக அனுப்பியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷ கொலைச் சதி தொடர்பிலும் மாகந்துரே மதூஷின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழிபெயர்ப்பு – ரிஷ்மா..