டுபாயில் கைதான மாகந்துரே மதூஷுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்த ‘கெசா’ என அறியப்படும் ஹெட்டியாராச்சிலாகே அசேல எரங்க என்பவரை 07 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தங்காலை குற்றத் தடுப்பு பிரிவினரும், தங்காலை திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கடந்த 10ம் திகதி சூரியவெவ பகுதியில் வைத்து கைதான இவரிடம் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், 20 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது