துபாயில் கடந்த 05ம் திகதி கைது செய்யப்பட்ட பாதாளக் குழுவொன்றின் தலைவரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 31 பேரையும் இம்மாதம் 27ஆம் திகதி முதற் தடவையாக துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு துபாய் பொலிஸார் தீர்மானித்துள்ளதாகத் அந்நாட்டு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் 31 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அதில் 15 பேருக்கு மாத்திரம் பிணை வழங்கி அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக சமூக ஊடகங்கள் துபாய் ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.