மதூஷுடன் துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்க விஷேட குழு நியமனம்…

(FASTNEWS | COLOMBO) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில், துபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதாகி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 07 பேர் கொண்ட விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.