மதூஷ் குழுவினரின் கைதுடன் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானமை தொடர்பில் டுபாய் பொலிஸ் விசாரணை…

பாதாள உலகக் குழுவின் தலைவரான மதூஷ் உள்ளிட்ட குழுவினரை கைது செய்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியமை தொடர்பில் டுபாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகைப்படங்கள் டுபாய் பொலிசினால் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கைதின் போது சந்தேக நபர்களை அடையாளம் காண புலனாய்வு அதிகாரிகளுக்கு டுபாய் பொலிசாரால் வழங்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு கசிந்த புகைப்படங்கள் இலங்கை ஊடகங்களில் எவ்வாறு வெளியானமை என விசாரணைகள் முன்னெடுக்கபப்டுவதாக டுபாய் அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.