மத்தளை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் காணப்படும் மான்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளை வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
அண்மையில் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.