மத்தளை விமான நிலையத்துக்கு செல்லவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள்

(FASTNEWS|COLOMBO) – 2015 – 2018 காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளும், அரச மதிப்பீட்டு திணைக்களத்தின் அதிகாரிகளும் இன்று(08) மத்தளை விமான நிலையத்துக்கு செல்லவுள்ளனர்.

குறித்த விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதனால் விமான நிலையத்துக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக குறித்த இந்த குழு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.