மத்தள விமான நிலையத்திற்கு 205 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் இந்திய அரசின் யோசனை தற்போது இலங்கை அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
சீனாவினால் உரிமை பெறப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சுமார் 40Km தொலைவிலுள்ள மத்தள விமான நிலையத்திற்காக முதலீடு செய்ய முன் வந்துள்ளமை இந்தியாவின் தந்திரோபாய முறையாகும் என்றும் ‘த ஹிந்து’ மேற்கோற்காட்டி சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த இந்த யோசனை ஊடாக குறித்த விமான நிலையத்தின் 70% உரிமையை 40 ஆண்டுகளுக்கு இந்திய பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
(rizmira)