மத்திய அமெரிக்க நாடுகளான கோஸ்டா ரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ் ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள ‘நேட்’ சூறாவளியால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மத்திய அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட இந்த சூறாவளி காரணமாக கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ரயில் பயணங்களும், விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.